தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பதில் அளிக்காம்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து பேசியதால் திமுக அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி மேயர் இருக்கையை விட்டு எழுந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் திமுக அதிமுக அமமுக பாஜக காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் பேசும்போது தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் 50 கடைகளை வணிகர்கள் திரும்ப ஒப்படைப்பது குறித்த தீர்மானம் பற்றி கேள்வி எழுப்பிய போது மேயர் சன் ராமநாதன் அதற்கு பதில் சொல்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்ற குற்றவாளி என ஒருமையில் கூறியதால் அதிமுக அமமுக உறுப்பினர்கள் மறைந்த முதல்வர் கருணாநிதி மீத சர்க்காரியா கமிஷன் விசாரணை நடத்தியது என்றும் தற்போதைய முதல்வர் மீதும் வழக்கு இருந்ததாக கூறியதால் அதிமுக திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விபரீதத்தை புரிந்து கொண்ட மேயர் சன் ராமநாதன் திடீரென எழுந்து வெளிநடப்பு செய்ததால் மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒருமையில் பேசிய மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தஞ்சையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிமுக அமமுக பாஜக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.