4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (எ)மீனாட்சி சுந்தர் (28) இவர் பர்மா காலனியை சேர்ந்த வடைகடை உரிமையாளர் ராமன் (56) என்பவரிடம் ரூபாய் 4லட்சம் பணம் கடன் வாங்கி இருந்ததாகவும் அந்த பணத்தை ராமன் திரும்ப கேட்டதாகவும் ஆனால் சுந்தரால் கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சுந்தருக்கும் ராமனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமன் தனது வடை கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 போட்டு வியாபாரம் செய்து அதன் மூலம் தனது கடனை அடைக்க மீனாட்சி சுந்தரிடம் கூறியதாகவும் அதன் அடிப்படையில் ராமன் வடை கடையில் மீனாட்சி சுந்தர் சிக்கன் 65 வியாபாரம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமன் கடனை சுந்தர் அடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த ராமன் நேற்று இரவு சுந்தரை தனியாக பாலாஜி நகர் கவுற்று வாய்க்கால் பாலம் அருகே அழைத்துச் சென்று மதுபானம் வாங்கி கொடுத்து குடிக்க வைத்து சுந்தருக்கு போதை ஏறியதும் சுந்தரின் கை, கால்களை கயிற்றில் கட்டி பின்னர் புதிதாக வாங்கி வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்து கொன்றதாக ராமன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் கவுறுவாய்க்கால் பாலம் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்த சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராமனிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.