தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்க கூடுகை சார்பில் கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தரங்கம்பாடி பங்குத்தந்தை அருளானந்து தலைமை வகித்தார். அகில இந்திய சமாதான இயக்க கூடுகை மாவட்ட அமைப்பாளர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு 200 கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு போர்வை, புடவை மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சிஎஸ்ஐ சபை குரு தங்கத்துரை, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமன், பேரூராட்சி துணை தலைவர் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.