மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார். திருமதி.G. ராஜம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தாயின் நினைவாக நூலகப் புரவலானார்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் தனது தாயார்.திருமதி.ராஜம்மாள் நினைவாக ரூபாய் ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலானார்.
நூலகப் புரவலரான முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியனை மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சிசுந்தரம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அருகில் வாசகர் வட்டத் தலைவர் அ. மரிய .சூசை, மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துகுமார், கவிஞர் பாப்பாக்குடி. இரா. செல்வமணி, நல் நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் கவிஞர் சுப்பையா,
பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன் சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி.