பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவரும் மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரின் அறிவுறுத்தல் படி ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய கழக அவைத்தலைவர் ஈ.கேமாரிமுத்து ஊராட்சியில் உள்ள எலையமுத்தூர், செல்வபுரம், பார்த்தசாரதிபுரம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
ஒன்றிய கழக செயலாளர் எஸ் கே.மெய்ஞானமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனையின்படி ஒன்றியம் முழுவதும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு கழக உடன்பிறப்புகளால் சிறப்பாக நடைபெற்றது.
எலையமுத்தூர் ஊராட்சியில்கவுன்சிலர் தங்கமணி ஜெயபிரகாஷ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், கழக கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.