108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் கடனாநதி கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் திருக்கோவில் உள்ளது.
கோவிலில் நடந்த செவ்வாய் கிழமை அன்று கால்நாட்டப்பட்டு இன்று காலை நாலாயிரத்து அம்மனுக்கு ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம் ஊரை வளம் வந்து,
பின்னர் 3 மணி அளவில் கடனா நதி கரையோரம் அமைந்திருக்கும் நாலாயிரத்தி அம்மன் எண்ணாயிரம் அம்மனுக்கும் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்ப தீப ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவை காண வந்திருக்கும் பக்தர்களுக்கு மதிய அன்னதான வழங்கப்பட்டது இரவு சுவாமி சப்புற பவனி திருவீதி உலா நடைபெறும் நிகழ்வை நாலாயிரத்து அம்மன் பக்தர்கள் செய்திருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS அம்பாசமுத்திரம்ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்பிரம்மதேசம் கிராமம்