அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்து விடும் தருவாயில் உள்ளது என்று விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.
ஏற்கனவே, நாற்று நட்டபோது பெரும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி பிறகு அரசின் நிவாரண தொகையை வைத்து மீண்டும் நடவு செய்தனர். தற்பொழுது அந்த நடவு செய்த பயிர்களை அறுவடை செய்யும் தருணத்தில் மீண்டும் கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.
இதுமட்டுமல்லாமல், அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு உளுந்து அல்லது பயிர் அடிப்பது வழக்கம், தற்பொழுது உளுந்து மற்றும் பயிர்கள் நிலையும் முற்றிலும் வீணாகி உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20% மட்டுமே அறுவடை நடந்து உள்ளது. இன்னும் 80 % அறுவடை செய்யும் தருணத்தில் உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் எங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றோம் என்று விவசாய சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைவரில் ஒருவரான ரமேஷ் அவர்கள் கூறினார்.