அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,.
அது போல் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது வேத மந்திரங்கள் முழங்க தேவாரம் பாட நாதஸ்வரம் இசைக்க ஸ்ரீ ஆறுமுக நயினருக்கு சோடசை தீபாரதனை நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்சங்கரன்கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசிதென்காசி மாவட்டம்தைப்பூச ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்