தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கல் குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் 300 குழந்தைகளுக்கு மேல் இருந்தும் ஒரு உதவியாளரே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிகவும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகிறார்.
100 குழந்தைகள் உள்ள இரண்டு உதவியாளர் பணிபுரியும் சத்துணவு மையத்திலிருந்து ஒரு உதவியாளரை கல்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்திற்கு இடமாறுதல் செய்திட மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து..
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பானுமதி, மானாமதுரை வட்டார தலைவர் திராவிடச் செல்வி, வட்டாரசெயலர் தவமணி ஆகியோர் முறையிட்டதன் அடிப்படையில் ஆவன செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிச்சை உடனிருந்தனர்.
செய்தியாளர் வி.ராஜா.