அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் விவசாயிகளின் தோட்டத்தில் புகுந்து 4 நாய்களை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில்,..
வனத்துறையினர் தற்பொழுது வரை அப்பகுதியில் கூண்டு எதுவும் வைக்கவில்லை எனவே வரும் 14 ஆம் தேதிக்குள் அப்பகுதியில் கூண்டு வைத்து நாய்களை கவ்விசெல்லும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தப் போவதாக இன்று அப்பகுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர் இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் அப்பகுதியில் தற்பொழுது கண்காணிப்பு 5 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,
மாவட்ட வன அலுவலரிடம் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து உடனடியாக அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.