சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் அருகே பிரமாண்டமான அங்காளபரமேஸ்வரி சுவாமி திருவுருவ மண்சிலை வடிவமைத்து வண்ண நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பம்பை, உடுக்கை, மேள வாத்தியங்களுடன் சிறப்பு பூஜை மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து திரளான பெண்கள் பொங்கல் படைத்து சுவாமி சிலை சுற்றி அமர்ந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிப்பட்டனர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அங்காளன் சாந்தி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.