7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு.

செய்தியாளர் மணிகண்டன்.
திருநெல்வேலி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் 7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான குட்டம் குமாரபுரம், கரைச்சுத்துப் புதூர்,
கஸ்தூரிரெங்க புரம், மிக்கேல் நகர் ஆகிய இடங்களில் சபாநாயகர் அப்பாவு புதிய கிளை நியாய விலைக் கடைகளை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து.. குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் துவக்கி வைத்து தரகன்காடு, தெற்கு புலிமான்குளம், பெருங்கண்ணன்குளத்தில் புதிய கிளை நியாய விலைக்கடையை திறந்து வைத்து.
கஸ்தூரி ரெங்கபுரத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறந்து வைத்தார்.தோட்டவிளையில் புதிய கிளை நியாய விலைக்கடையை திறந்து வைத்து.
தோட்டவிளை விலக்கில் 3.5 லட்ச ரூபாய் மதிப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
திருவம்பலபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இருந்து 11 லட்ச ரூபாய் புதிய ரேசன்கடை கட்டிட கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
திருவம்பலாபுரத்தில் 7 லட்ச ரூபாய்மதிப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்,ஆத்து குறிச்சி பிரகாசபுரத்தில் புதிய கிளை நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்.
அழகனாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், சிதம்பரம் ஊராட்சி தலைவர் பேபிமுருகன்,
ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன், ராதாபுரம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பரபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.