BREAKING NEWS

7 ஆண்டுகளாக போராடிய மாணவி, மாணவன்: உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.

7 ஆண்டுகளாக போராடிய மாணவி, மாணவன்: உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூஜா, மாணவன் வாசன் அளித்த கோரிக்கை மனுவை உடனடியாக நிறைவேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 7 ஆண்டு பிரச்சினையை ஒரே நாளில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர்.

பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்து, தங்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, முதல்வர் தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மனு அளித்தனர்.

அந்த மனுவினை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் முதல்வர் ஸ்டாலின் இன்று செஞ்சியில் மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, மாணவர்களின் பெற்றோர் உடனிருந்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )