BREAKING NEWS

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா நகர் பகுதி முழுவதும் போதை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போதை பொருட்கள் விற்பனை செய்யும் போது பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில் பின்புறம் உள்ள கானாறு கரையோரம் 2 நபர்கள் பிளாஸ்டிக் பண்டல்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து சிரஞ்சிகள் மூலமாக கைகளில் போதை மருந்து டோஸ் ஏற்றிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டா கீழாச்சூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற பிரகாஷ்ராஜ் (24 ), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜ் (25 )என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் சிரஞ்சுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை வாங்கி வந்து பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆகியோருக்கும் கஞ்சா, போதை அடிமையாளர்களுக்கு போதை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் தொரப்பாடி மத்திய ஆண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS