BREAKING NEWS

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது.

 

செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட உபயோகங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதேபோல் செம்பனார்கோயிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா முருகன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

 

இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எம்எல்ஏ, செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS