BREAKING NEWS

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ஆண்டு அகில இந்திய ஹாக்கிப் போட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ஆண்டு அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடங்கியது.

 

மே 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 36 முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

கால் இறுதி வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகின்றன.

இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றிப் பெற்றது.

2வது லீக் ஆட்டத்தில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி மோதியது. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

3வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியுடன் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி மோதியது. இதில் 4:0 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

4வது லீக் ஆட்டத்தில் சென்னை அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியுடன் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி எக்ஸலன்ஸ் அணி மோதியது.

இதில் 6:5 என்ற கோல் கணக்கில்

ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.

CATEGORIES
TAGS