BREAKING NEWS

பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்

பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோயில் புகழ்பெற்ற பெருமாள் கோயில். இக்கோயில் கடந்த 100 வருடங்களாக கும்பாபிஷேகம் நடக்காமல் 1986-ல் மூலவர் சந்நிதி மட்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது.

அதன்பின் 2011-ல் ஒட்டுமொத்த கோயிலும், புனரமைத்து கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக 4 ஆண்டுகள் கோயிலில் பாலாலயம் செய்து மூடப்பட்டது.

மீண்டும் 2023 அக்டோபரில் ராஜகோபுரம் புனரமைக்க ராஜகோபுர பாலாலயம் செய்து சுவாமி வீதியுலா தடை செய்யப்பட்டது. ராஜகோபுரம் புனரமைக்கும் முடிவுறும் நிலையில் திருவடி ஆஞ்சநேயர் சந்நிதி, திருக்குளம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கி புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஆனால் கோயிலினுள் 16.03.2025 அன்று பாலாலயம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. இந்து அறநிலைய துறையிலிருந்து ஆணை வரப் பெறவில்லை என கூறுகின்றனர். ஆணை வழங்கப்படாத நிலையில் ஏன்? பாலாலயம் செய்யப்பட்டது.

பதில் சொல்ல யாரும் இல்லை. விரைவில் ஆணை பெற்று பணி தொடங்க பக்தர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் 2 திருமண மண்டபங்களையும் நிர்வகிக்க 2 பேரை நியமித்தும் அந்த ஊழியர்கள் அங்கு உட்காருவதில்லை.

கேட்டால் நான் வெட்டுவாணம் சென்றிருந்தேன், வேலூர் சென்றிருந்தேன், கோயிலுனுள் பில் போட்டுக் கொண்டிருந்தேன் என்ற பதில் வருகிறது.

இந்த வேலைக்கு நியமித்தார்களை இந்த வேலையில் முழு நேரம் ஈடுபடுத்தப்பட்டு மிகுதி நேரம் வேறு பணி அளிக்க வேண்டும். மேலும் தனியார் மண்டபங்களில் ரூம்கள் உள்ள நிலையில் இங்கு இல்லை. இங்கு அந்த குறை நீக்கப்பட வேண்டும். கோயில் எதிரில் உள்ள ரூமில் பாத்ரூம் வசதி இல்லை அதையாவது சரி செய்ய வேண்டும். அப்பொழுது தன் அங்கு வரும் பக்தர்களுக்கு ஏற்றார்போல் வசதியாக நிறைய பக்தர்கள் வந்து தரிசனம் செய்து தண்ணீர் நேர்த்திக் கடனை செலுத்திவிட்டு செல்வார்கள்.

மேலும் தனியார் மண்டபத்தை போட்டிப் போட்டு ஜெயிக்க முடியும். இந்து அறநிலையத் துறை செய்யுமா என பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளானர்.

CATEGORIES
TAGS