75வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக 75 மாணவர்கள் 75 நிமிடம் 75 வினாடி இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேக்கிலார்ப்பட்டி சாலையில் வேலன் வாழும் கலைக்கூடம் மற்றும் மகரிஷி விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வேலன் இளைஞர் மன்றம் சார்பில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 75 ஆவது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக 75 மாணவர்கள் 75 நிமிடம் 75 வினாடிகளில் சிலம்ப மாணவர்கள் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேனி நேரு யுவகந்தாவின் துணை இயக்குனர் செந்தில்குமார் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக தேனி நேரு யுவகேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் ஸ்ரீராம்பாபு ,விவேகானந்த பண்பாட்டு கல்வி மையம் இயக்குனர் செந்தில்குமார் ,சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான தமிழ் சங்கு, லோ கலா ஸ்ரீ சுந்தரவடிவேலன்,
ஆண்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் யாழிசை செல்வன், மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகடமிளின் ரவிக்குமார், பெரியகுளம் தோட்டக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் அனிதா ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் இண்டர்நேசனல் யுனிடட் கலாம் பவுன்டேசன் சார்பில் உலக சாதனை நிகழ்த்திய 75 மாணவர்களுக்கு பவுன்டேசன்சார்பில் Dr.சதிஷ் பாபு, கார்த்திகேயன் சிவரத்தினம் வெங்கடேஷ் பிரசாத், விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.