BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்டால் கைது செய்து தண்டனை வழங்குவதுமட்டும் அல்லாமல் அவர்கள், அவர்களின் உறவினர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும்-என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப் புதூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த டிசம்பர் மாதம் நாட்ராயன் என்பவரது வீட்டை சோதனை செய்ததில் சுமார் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததாக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் மற்றும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா ஆகியோர் கஞ்சா வியாபாரிகள் அவர்கள் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து 4 குற்றவாளிகள் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை மூலம் சுமார் 2 கோடியே 10 லட்சம் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வாகனங்கள், வங்கி இருப்பு தொகைகள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

இதில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளின் உறவினர்கள் சொத்துகளை முடக்குவது இதுவே திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாகும்.


மேலும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் சொத்துக்களை முடக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஏடிஎஸ்பி . லாவண்யா உட்பட காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ் பி.சீனிவாசன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )