BREAKING NEWS

ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா

ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஜான் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன்-ஸ்ரீ ஊர்க்காவலன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை யில் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ ஊர்காவலன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று (14 -6 2022 )கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தன பூஜை ,வாஸ்து சாந்தி பூஜை, ஆகியன நடைபெற்றது.

முன்னதாக கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று முடிந்தது .அதன் பின்னர் (15- 6 -2022)ஆம் தேதி இன்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் யாகசாலை அலங்காரம் ஸ்ரீ பட்டாளம்மன் ஊர்க்காவலன் சுவாமிக்கு முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால பூஜை , மூன்றாம் காலம் பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

இந்த யாக பூஜை ஸ்ரீவேங்கட ஜோதி பட்டாட்சியர் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்படும்போது ஆகாயத்தை நோக்கி 11 கருடன்கள் கோபுரத்தை சுற்றி வளம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் ஓம் சக்தி பராசக்தி என்று கோஷமிட்டு தங்கள் பக்தியின் பரவசத்தை வெளிப்படுத்தினர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித தீர்த்தங்கள் பட்டாட்சியர் திருக்கரங்களால் பக்தர்களுக்கு வாரி இரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் செய்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அனைவரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ ஊர் காவலன் சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )