BREAKING NEWS

நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி

நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த வயது 45. நிலக்கோட்டை நால்ரோடு அருகே பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் குமார் வயது 15. நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தந்தையை பார்ப்பதற்கு கடைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று நிலக்கோட்டை அன்பு தியேட்டர் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது வண்டி வண்டி மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி சாலையின் அருகே உள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை நிலக்கோட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் விரைந்து சென்று அருண்குமாரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அருண்குமார் உயிர் பிரிந்தது என கூறினார்கள். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )