பேரறிவாளன் விடுதலை!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
பேரறிவாளன் விடுதலை!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.இவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் தமிழகத்தில் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டணை அனுபவித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மே 11ம் தேதி நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில் ஏதேனும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க வேண்டும் எனக் கூறினார்.
அதன்படி நீதிபதிகள், கவர்னர் அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் விடுதலை குறித்த அதிகாரம் 72வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஒரு வழக்கின் விசாரணையை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே முடிவெடுக்கும் அதிகாரம் முடிவு செய்யப்படும். இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனை பெற்றவர்களை, தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது குறித்த முடிவை மாநில அரசு எடுக்கலாம்.
நீதிபதிகள், தமிழக அமைச்சரவையின் முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினர். கவர்னரே இதில் கையெழுத்திட்டு முடித்திருக்கலாம். ஜனாதிபதிக்கு அனுப்பி, அவரையும் இழுத்து விட்டுள்ளார். அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது கவர்னரின் வேலை. ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாதததால் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக கவர்னர் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் பேரறிவாளனை 143 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் 30 ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.