கோவில்பட்டி ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணி
கோவில்பட்டி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணி.
கோவில்பட்டி அருகே பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் மற்றும் காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரமன்ற உறுப்பினர் கவியரசன், நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் ராமலட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடிசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்குசாமி, கிளைச் செயலாளர் பொன்ராஜ், குத்தகைதாரர் தங்கராஜ், அய்யாதுரை பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.