காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு!
காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு!
வேலூர் மாவட்டம் ,காட்பாடி விஐடி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் காட்பாடி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தீ தடுப்பு குறித்தும் ,பாதுகாப்பாக செயல் படுவது குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மோகன்ராஜ், பால்பாண்டி தணிகைவேல், முருகேசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செயல் முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசனின் பணி அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விளக்கம் மாணவச் செல்வங்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்