திருச்சியில் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சியில் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான கடைகள் அனைத்தும் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து கொள்வதால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் சிங்காரதோப்பு, பர்மாபஜார் பகுதியை சுற்றி உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை முதலே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.