BREAKING NEWS

‘அன்பு மகள்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ – டி.இமான் நெகிழ்ச்சி!

‘அன்பு மகள்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ – டி.இமான் நெகிழ்ச்சி!

‘அன்பு மகள்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ - டி.இமான் நெகிழ்ச்சி!

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவருக்கும் மோனிகா என்பவருக்கும் கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 13 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாகவும், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தங்களுடைய பர்சனல் பக்கங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இமான் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தார்.

இதற்குப் பிறகு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னுடைய பெற்றோர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க உள்ளதாகவும், பெண் குழந்தை உள்ள விவாகரத்து ஆன அல்லது கணவனை இழந்த பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாக எதிர்பார்ப்பதாகவும் இமான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமானுக்கு இரண்டாவது திருமணம் சென்னையில் நடைபெற்றது. நண்பர்கள் உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். இந்தத் திருமணப் புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமான் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ‘அமலி உபால்ட் உடன் கடந்த ஞாயிறன்று எனது மறுமணம் நடைபெற்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமலி மறைந்த பப்ளிசிட்டி டிசைனர் உபால்ட் மற்றும் சந்திரா உபால்டின் மகள். எனது கடினமான சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்த என்னுடைய தந்தை டேவிட் கிருபாகர் தாஸூக்கு மிகவும் நன்றி. பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம் எனக்கும், கடைசி சில வருடங்களாகக் கடினமான சூழலை எதிர்கொண்ட என்னுடைய குடும்பத்திற்கும் ஆறுதலும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயமாகவும் உள்ளது. மறைந்த என் அம்மா மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதமும் எங்களுக்கு நிச்சயம் இருக்கும். அமலி போன்ற அற்புதமானவர் எனக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.

அமலியின் மகள் நேத்ரா இனிமேல் எனக்கு மூன்றாவது மகள். இனி நான் நேத்ராவின் தந்தை என்ற விஷயம் எனக்கு வானத்தளவு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம், இந்தத் திருமணத்தில் என்னுடைய மகள்கள் வெரோனிகா மற்றும் பெல்ஸிகாவையும் நான் ‘மிஸ்’ செய்கிறேன். நானும் என் குடும்பத்தாரும் என் குழந்தைகள் ஒருநாள் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்பதை அன்புடன் எதிர்நோக்கி உள்ளோம். அப்படி அவர்கள் வரும்போது அமலி, நேத்ரா மற்றும் என் உறவினர்கள் அனைவரும் அவர்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம். எங்கள் மீது அன்பு செலுத்தும் அமலியின் குடும்பத்திற்கும் இசை ரசிகர்களாகிய உங்களுடைய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி’ என அந்தப் பதிவில் இமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )