பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை! மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை!!
பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை! மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை!!
பள்ளிகளில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
பாலியல் தொல்லைகளால் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு உச்சநீதிமன்றம் தற்போது ஒரு புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது.
அதில், ‘‘மாணவிகளுக்கு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லையை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை முக்கிய இடங்களில் அமைப்பதை கட்டாயம் ஆக்கலாம். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் விசாகா வழிமுறைகள் வழக்கத்தில் இருப்பது போல் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொலையில் இருந்து அவர்களை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்ற ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் விசாகா கமிட்டி போல் பள்ளிகளிலும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழிநாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனு மீது அனைத்து மாநில அரசு மற்றும் மத்திய அரசும் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணை வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பட்சத்தில் மாணவிகளுக்கு பள்ளிகளில் எந்தவித பாலியல் தொல்லையும் நேராது என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனை உடனடியாக உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வரும்பட்சத்தில் படிப்பில் ஏற்கனவே சிறந்து விளங்கும் மாணவிகள், மன உளைச்சல் இல்லாமல் பாதுகாப்பாக மென்மேலும் உயர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.