BREAKING NEWS

மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!

மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!

மாதனூரில் தற்காலிக பாலம் பாலாற்று வெள்ளத்தால் உடைந்ததையடுத்து அதனை நேரில் பார் வையிட வந்த தி.மு.க.எம். எல்.ஏ. வில்வநாதனுடன் பா.ஜ.கவினர்இன்றுவாக்கு வாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்துமழை பெய்துவருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதனூர் பாலாற்றில் தற்காலிகபாலம் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.23 லட்சம் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்ட பாலாற்று வெள்ளத்தால் மாதனூர் பாலம் முழுவதுமாக உடைந்து சேதமானது.

இதனையடுத்து இன்று உடைந்த பாலத்தை ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் மற்றும் ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆகியோர் நேரில் பார்வையிட வந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் அங்கு வந்தனர் சில மாதங்களிலேயே உடைந்து விட்டபாலத்திற்கு ரூ.23 லட்சம் செலவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வில்வநாதன் எம்.எல்.ஏ.வுடன்பா.ஜ.க வினர் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். அப்போது அ.தி. மு.க. ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்கமும் அங்கு வந்து எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரப ரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )