BREAKING NEWS

கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில் 12வது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள் 17ம் தேதி தொடங்கியது.


இதில் 30 அணிகள் கலந்து கொண்டுள்ளது, 540 வீரர்களும், 50 போட்டிகளும், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்று 4ம் நாள் ஆட்டத்தில் காலையில் G பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு- ஜார்கண்ட் அணி மோதியது.


இதில் 1-7என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது.இதில் சிறந்த ஆட்ட நாயகனாக அசீம்ஐந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டத்தில் G பிரிவில் இடம் பெற்ற சத்தீஸ்கர் – கோவா அணி மோதியது இதில் 9-0என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கர் அணி வெற்றி பெற்றது.இதில் சிறந்த ஆட்ட நாயகனாக விஷ்ணுயாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )