BREAKING NEWS

உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு.

உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு.

செயல்பாடு இல்லாத கண்காணிப்பு கேமரா.

உடுமலை அருகே உள்ள கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டதால் கனிமவள கடத்தல் நடக்கிறது.
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கடத்தூர் அமைந்துள்ளது இங்கு மாவட்ட எல்லையோர அமராவதி ஆற்று பாலத்தின் அருகில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது இதனால் இங்கு கனிம வள கடத்தல் ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவை குறைந்திருந்தது. தவிர கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஆனால் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டில் இல்லை இது சமூக விரோதிகளுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.


தற்போது இந்த சோதனைச்சாவடி பயன்பாட்டிலிருந்து விளக்கப்பட்டுள்ளது இதனால் இந்த பகுதியில் ஆற்றின் ஓரம் வாய்க்கால் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மணலெடுத்து கடத்தி வருகின்றனர்.
தற்போதுஅமராவதி வாய்க்கால்களில் நீர் வரத்து இல்லை ஆற்றிலும் ஆற்றின் ஓரங்களிலும் நீர் குறைவாக உள்ளதால் மாட்டு வண்டிகள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்களில் மணலை கடத்திச் சென்று குறித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.


திண்டுக்கல் மாவட்ட எல்லையில் பல்வேறு தொழில் சாலையில் இயங்கி வருகிறது.
மேலும் இங்கே வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் தங்கி உள்ளனர் இவர்களுக்கு மடத்துக்குளம் தாலுகா பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு கொடுக்கப்படுகிறது இவற்றை தடுக்க சோதனைச்சாவடி மீண்டும் கொண்டுவர வேண்டும் எனவும் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராவை செயல்படுத்தவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )