உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு தமிழகத்தில் சீட் கிடையாது!! அமைச்சர் அதிரடி!!
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு தமிழகத்தில் சீட் கிடையாது!! அமைச்சர் அதிரடி!!
இந்தியாவில் இருந்து உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளை படிக்க சென்றவர்கள் அங்கு நடைபெற்று வரும் போர் காரணமாக தாயகம் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அவர்களின் படிப்பு பாதியில் நின்று மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘உக்ரைன் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் வழங்குவது மத்திய அரசு கையில்தான் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் கூறும்போது, ‘‘ரூ.151 கோடியே 17 லட்சம் செலவில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை கொரோனா அதிகரித்த காலத்தில் 800 படுக்கை வசதி கொண்ட சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது என்று கூறினார்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் மீண்டும் இந்த மருத்துவமனை முதியோர் நல மருத்துவமனையாக மாற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ததில், உடனடியாக இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்டிடத்தை துரிதகதியில் சரி செய்து அங்கு மீண்டும் முதியோர் நல மருத்துவமனை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கட்டுமான முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
மருத்துவப் பணியிடங்களுக்கு முதல்முறையாக 1,000 பேர் பணிமாறுதல் செய்யப்பட உள்ளனர் என்றும், இதற்கான கலந்தாய்வு வருகிற செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் நடைபெற்று, அதைத்தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமையன்று பணிமாறுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட்டு உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் வழங்க முடியாது. இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.விட்டுப்போன படிப்பை தாய்நாட்டிலேயே தொடரலாம் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.