தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார்.
தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார்.
நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தினமும் ஒரு வார்டு வீதம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று தஞ்சை 49 வது வார்டில் ஆய்வு செய்தபோது மேயர் சன்.ராமநாதன் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகளை ரோடு ரோலர் வாகனத்தை இயக்கி பணிகளை தொடங்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை போடும் பணிகள் தொடங்கியிருக்கிறது தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி பழைய சாலை தோண்டி எடுக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது இன்னும் 6 மாதத்தில் தஞ்சை மாநகராட்சயில் 90 சதவீத பணிகள் நிறைவு பெறும் என மேயர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.