ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து 100 நாள் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குமரெட்டியாபுரம், மடத்தூர்,பண்டாரம்பட்டி ,பாத்திமா நகர் ,திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதியில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு கண்டன கோஷங்களை எழுப்பி மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல்துறை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்பிரவேஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
