BREAKING NEWS

திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறி வந்த காளைகளை அடக்க முயன்று 3வீரர்கள் காயம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகரில் காட்டூர் ஜல்லிகட்டு பேரவை சார்பில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி ஆர்.டி.ஓ தவசெல்வம் தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500 ஜல்லிக்கட்டு காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு உள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் எல்இடி டிவி, பிரிஜ், சோபா செட், பீரோ, கட்டில், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.


காட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கற்பகம் தலைமையில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், காயம் அடைந்தவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ உதவியும் அளித்தனர்.
மாடு பயந்தது திண்டுக்கல்லை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகுமார், புதுக்கோட்ட விளையாம்பட்டியை சேர்ந்த யோகேந்திரன், பார்வையாளர் சாத்தாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (27)ஆகிய 3 பேரும் காயமடைந்தனர் இதில் முத்துக்குமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருச்சி கால்நடை கூடுதல் இயக்குநர் மருததுரை தலைமை யிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியுடன் இருப்பதா என்பது குறித்து சோதனை செய்தனர்.

திருவெறும்பூர் பொறுப்பு டிசிஆர்பி டிஎஸ்பி திருவெறும்பூர் (பொ) ஜெயசீலன் தலைமையிலான 113 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதில் முன்னாள் எம்எல்ஏ சேகரன் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி மாரியப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )