திருச்சி மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட 200 பேருக்கு பட்டா – அமைச்சர்கள் வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட 200 பேருக்கு பட்டா – அமைச்சர்கள் வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட 200 பேருக்கு பட்டா – அமைச்சர்கள் வழங்கினார்.
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆட்சிக்கு வந்தால் பட்டா இல்லாத பொது மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் பொது மக்களுக்கான பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மாவட்டம் 25வது வார்டு 200 பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.