BREAKING NEWS

சாதி பெயரை வைத்து தான் பொறுப்பு கொடுக்கப்படும் – தமிழர் தேசிய கட்சி தலைவர் செல்வகுமார் பேட்டி.

சாதி பெயரை வைத்து தான் பொறுப்பு கொடுக்கப்படும் – தமிழர் தேசிய கட்சி தலைவர் செல்வகுமார் பேட்டி.

வீரமுத்தரையர் சங்கம் என்று நடத்தி வந்த மாநில தலைவர் செல்வகுமார். இன்று தமிழர் தேசம் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த பத்து வருடங்களாக வீரமுத்தரையர் சங்கம் என்ற பெயரில் முத்தரைகளுக்கு பணிபுரிந்து வந்து தற்போது தமிழர் தேசம் கட்சி என்ற பெயரில் அரசியலில் ஒதுக்கப்பட்ட சமூகத்தை உயர்த்துவதற்காக துவக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இருவரும் குறிப்பிட்ட சமூகத்திற்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அரசியலிலும் ஒதுக்கப்பட்ட சமூகத்துக்கான கட்சி ஒதுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடும் கட்சியாக தமிழ் தேசியக் கட்சி இருக்கும்.


திராவிட கட்சிகள் முத்தரையர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. திராவிட கட்சிகள் எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கிறது. எந்த சமூகம் எந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அங்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும். ஆனால் முத்தரையர் அதிகமாக இருக்கும் இடங்களிலும் மாற்ற சமூகத்தினருக்கு வாய்ப்பு தரப்படுகிறது.

கூட்டணியே கிடையாது என்று கூற முடியாது. முத்தரையர்கள் வாழ்வியல் மேம்படவேண்டும் அதற்காகத்தான் நான் திமுக அதிமுகவுடன், பிஜேபியுடன் கூட நல்ல அணுகுமுறையோடு இருக்கிறோம். முத்தரையர்கள் மக்களுக்கு யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள் அவருடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்தார்.

மேலும், நான் செய்யப் போகும் செயல் விபரீதமாக கூட இருக்கும் சாதியின் பெயரை வைத்துத்தான் பொறுப்பு கொடுக்க இருக்கிறோம். சாதியாக வா என்று தான் தமிழர் தேசியக் கட்சிக்குள் அழைக்கிறோம் என தெரிவித்தார்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் தளவாய்ராஜேஷ் மாநில பொருளாளர் கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )