அதிமுக மாணவரணி தலைவருக்கு சராமாரி கத்திக்குத்து!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
அதிமுக மாணவரணி தலைவருக்கு சராமாரி கத்திக்குத்து!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
வீட்டு வாசலில் இருந்து காரை எடுக்க சென்ற போது அதிமுக மாவட்ட மாணவர் அணி தலைவரை போதை ஆசாமிகள் சிலர் தாக்கிய சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக மாவட்ட மாணவர் அணி தலைவராக பதவி வகித்து வரும் மணிகண்டன் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதி, ராஜி தெருவில் தனது தந்தை ராஜேந்திரனுடன் (வயது 50) வசித்து வருகிறார். மணிகண்டன் நந்திவரம்& கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை, மணிகண்டன் தனது காரை வீட்டில் இருந்து வெளியில் எடுக்க சென்ற போது, 2 பைக்குகளில் வந்த போதை ஆசாமிகள் மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். மணிகண்டனை போதை ஆசாமிகள் நீண்ட நேரமாக நோட்டமிட்டது பின்னர்தான் தெரிய வந்தது.வாய்த்தகராறு பின்னர் கைகலப்பில் முடிந்தது. போதை ஆசாமிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகமண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதனால் வலியில் துடித்த மணிகண்டனின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் போதை ஆசாமிகள் தாங்கள் வந்திருந்த பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதல் குறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் ரத்தவெள்ளத்தில் மிதந்த மணிகண்டனை மீட்டு கூடுவாஞ்சேரியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கத்தியால் தாக்கிய 6 போதை ஆசாமிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து ஆசாமிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.நடுரோட்டில் கத்திகளை வைத்துக் கொண்டு போதை ஆசாமிகள் இதுபோன்ற கொலை வெறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.