BREAKING NEWS

இசை வீடியோ எடுப்பதாகக் கூறி கடத்திச் சென்று கொடூரக் கொலை: காணாமல் போன பாடகி சடலமாக மீட்பு

இசை வீடியோ எடுப்பதாகக் கூறி கடத்திச் சென்று கொடூரக் கொலை: காணாமல் போன பாடகி சடலமாக மீட்பு.

இசை வீடியோ எடுப்பதாகக் கூறி கடத்திச் சென்று கொடூரக் கொலை: காணாமல் போன பாடகி சடலமாக மீட்பு

காணாமல் போன இளம் பாடகி, 12 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்தவர் பாடகி சங்கீதா (வயது 26). டெல்லியில் வசித்து வந்த இவர், ஹரியான்வி மொழியில் பாடல்கள் பாடி வந்தார். கடந்த மே 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர், திரும்பி வரவில்லை. அவர் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் கடந்த 14-ம் தேதி போலீஸில் புகார் செய்தனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்திலுள்ள பைனி பரோன் (bhaini bharon) கிராமத்தில் இளம் பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாடகி சங்கீதா என்பது பின்னர் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சங்கீதாவின் போன் திடீரென ஆன் ஆனதை அறிந்த போலீஸார் அதை வைத்து மேஹம் பகுதியைச் சேர்ந்த ரவி (20) என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அகில் (20) என்பவரையும் கைது செய்தனர். இருவரும் சங்கீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இசை வீடியோ எடுப்பதாகக் கூறி கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின், டெல்லி போலீசுக்கு மாற்றப்பட இருக்கிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )