உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு..!
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு..!
கொரோனா பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக டெட்ரோஸ் அதனோம் செயல்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியில் இருந்த, எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியான டெட்ரோஸ் அதனோமின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது அவர் 2வது முறையாக போட்டியிட்டு, மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். அடுத்த 5 ஆண்டுக்கு அவர் தலைவராக செயல்படுவார். கொரோனா நோய்த் தொற்றின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை டெட்ரோஸ் திறம்பட வழிநடத்தினார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள டெட்ரோஸ் அதனோமுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.