ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் ஆசியஜோதி இந்தியாவின் நவீன சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 58-வது நினைவு நாள் அஞ்சலி.!

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் ஆசியஜோதி இந்தியாவின் நவீன சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 58-வது நினைவு நாள் அஞ்சலி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று 27/05/2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமையில் மூன்றாம் மண்டல தலைவர் டி. திருச்செல்வம் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,மாவட்ட நிர்வாகிகளான கே.ஜெ.டிட்டோ,பி.ஆறுமுகம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நா.கார்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன், ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரவீன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கேசவன் நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.