ஆத்மா திட்டம் 22- 23 ஆண்டிற்கான ஆத்தூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது,

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி , அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் ஆத்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் , அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமாரசாமி, அவர்கள் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்,
ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார்,இச்சிறப்பு கூட்டத்தில் தோட்டக்கலை அலுவலர், கோபால், வேளாண் வணிக அலுவலர் , சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்,
இக்கூட்டத்திற்கு வரவேற்புரை திலகவதி உதவி தொழில்நுட்ப மேலாளர், நன்றியுரை சுமித்ரா வட்டார தொழில்நுட்ப மேலாளர், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்செல்வி ஏற்பாடு செய்தனர், இக்கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.