மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம்.

மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம்.
பெட்ரோல் டீசல் கேஸ் மீதான கொடூரமான வரிகளை கைவிட்டு விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெறுக ,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட 16 அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலை கடைகளில் கிடைத்திட நடவடிக்கை எடு, வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ 7,500 வழங்கிடு,ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிடு,நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவா, அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை முழுமையாக பூர்த்தி செய் ஜவுளித் தொழிலை பாதிக்கும் பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்து,வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட மத்திய சட்டம் கொண்டு வா, கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களை கறாராக வசூல் செய்து, விவசாயத்தில் காப்பீட்டை மறைக்காதே, பொதுத் துறைகளை சிரழிக்காதே தனியார்மயத்தை கைவிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி பாசிசம் ,மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தியும் சிபிஐ(எம்) ,விசிக உள்ளிட்ட கட்சிகள் சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டன. சிபிஐ(எம்) ,
மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வடிவேல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ராஜரத்தினம், ஈஸ்வரன்,ஆறுமுக,ஓய்வு பெற்ற ஊதியர் சங்கத் செயலாளர் கருணாநிதி,கட்டுமான சங்க மாவட்ட குழு உறுப்பினர் தண்டபானி, விசிக மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்,மடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் சீட் கவர் சேகர்,சத்யராஜ் , சதீஷ்குமார் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.