பந்தநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் மேலசெல்லப்பன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தாயி என்கிற அங்காள பரமேஸ்வரி ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 25 ஆம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, யாகசாலை பிரவேசம் ஆரம்பம், விசேஷ த்ரவ்ய ஹோமம் ஆகியவையும், 26ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜை ஆரம்பம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், நாடிசந்தானம், பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், மகாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.