BREAKING NEWS

அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து மனு அளித்தனர்.

அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் நெடுவாசல் வருவாய் கிராமத்தில் வெண்ணாறு பிரிவிலிருந்து பிரிந்து வரும் அம்மாபேட்டை மூன்றாம் வாய்க்கால் தலைப்பில் பிரிந்து செல்லும் கோவில்வெண்ணி பி பிரிவு வாய்க்காலும், புத்தூர் பி பிரிவு வாய்க்காலும், அம்மாபேட்டை சுடுகாட்டிற்கு நடுவில் தென்புறமும் வடபுறமும் சென்று வருகிறது மழை காலங்களில் சுடுகாட்டில் தண்ணீர் புகும் நிலை கடந்த காலங்களில் இருந்து வந்தது தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலின் இரு புறங்களிலும் உள்ள கரைகளை உயர்த்தி மேடு பள்ளமாக இருந்த சுடுகாட்டை சமன்செய்து இந்த வாய்க்கால் மூலம் தஞ்சாவூர்

மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் தங்குதடையின்றி சென்று சென்று விவசாயம் பாதுகாக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி விரைவில் மின் மயானம் ஆக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்த அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அம்மாபேட்டை ஒன்றியக்குழுவின் சார்பில் நன்றி தெரிவித்து கோரிக்கை மனுவை அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இரா.இராஜா அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன் வழங்கினார், உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.எஸ். பாலு, ஒன்றிய நிர்வாகிகள் எஸ் .எம் குருமூர்த்தி , கே .ராஜாராமன், ஜி நாகராஜன், கே.லெட்சுமணன், எம், ராஜாமாணிக்கம் எஸ்.உத்திராபதி,உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )