BREAKING NEWS

உலகின் எந்த மூலையிலிருந்தும் இலவசமாக தமிழ் கற்க அருமையான வாய்ப்பு!!

உலகின் எந்த மூலையிலிருந்தும் இலவசமாக தமிழ் கற்க அருமையான வாய்ப்பு!!

பெங்களூரில் இயங்கி வரும் தமிழ் அறக்கட்டளை சார்பில் உலகில் இருக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ் கற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுத்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.சொந்த ஊர், சொந்த மாநிலத்தை விட்டு மக்கள் தங்கள் பிழைப்பிற்காக வேறு மாநிலங்களுக்கு மக்கள் செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

தமிழ்

மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுகின்றனர். இதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி தெரியாமல் போகக்கூடிய துரதிருஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர்கள் தமிழ் மொழியை நன்கு அறிந்த போதும், நேரமின்மை காரணமாக அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி கற்றுக் கொடுக்க முடியாமல் போகிறது.

இதனை கருத்தில் கொண்டு பெங்களூர் தமிழ் அறக்கட்டளை ‘தமிழ் அறக்கட்டளை பெங்களூரு’ என்ற அமைப்பை நடத்தி வருகிறது. இதன்படி உலகின் எந்த மூலையிலும் உள்ள மக்கள் தங்கள், பிள்ளைகள் வீட்டில் இருந்தபடியே தமிழ் கற்றுக் கொள்ளும் வசதியை ‘தமிழ் அறக்கட்டளை பெங்களூரு’ செய்து கொடுத்துள்ளது.தமிழ் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் 4 வாரங்களுக்கு நடைபெறுகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புகள் நடக்கிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினமாகும். ஜூன் மாதத்திற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற ஜூன் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். 5 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த வகுப்பில் சேர்ந்து தமிழ் மொழியை இணைய வழியில் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ் மொழியானது மொத்தம் 4 படிநிலைகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு என்னும் தலைப்பில் எழுத்துக்கள், சொற்கள், சொற்றொடர் மற்றும் உரையாடல்கள் என 4 படிகளில் மாணவர்கள் தமிழ் பயில உள்ளனர்.

ஆன்லைன்  வகுப்புக்கள்

முதல் நிலை படிக்கு https://forms.gle/tsfckCbLUtRv9kiR7, இரண்டாம் நிலை படிக்கு https://forms.gle/xotNuejGfbb5gjb5d8, மூன்றாம் நிலை படிக்கு https://forms.gle/K1nmAkBvsR93PCDbA 4ம் நிலை படிக்கு https://forms.gle/XktDofzas4mh2siNA,இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை அறிய 9483755974, 9820281623 என்கிற எண்களில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )