SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
![SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-29-at-12.11.35-PM.jpeg)
புதிதாக கட்டப்ட்டு வரும் வணிக வளாகத்தில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு வாளாகத்திற்கு ஈ.கே.எம். அப்துல் கனி அவர்களுடைய பெயரையே மீண்டும் சூட்ட வேண்டு – SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு தெற்கு மாவட்ட SDPI-கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:-
1. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ள ஏ.கே.எம்.அப்துல் கனி மார்க்கெட் வளாகம் அமைந்துள்ள கடைகளை இடித்து புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த வணிக வளாகம் ஆரம்ப காலகட்டத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மரியாதைக்குறிய ஏ.கே.எம்.அப்துல் கனி அவர்கள் மருத்துவமனைக்காக இந்த இடத்தை தானமாக கொடுத்தார். பிறகு இது வணிக வளாகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆகவே நல்ல நோக்கத்திற்காக தன்னுடைய சொத்தை தானமாக வழங்கிய வள்ளல் ஈகே.எம்.அப்துல் கனி அவர்களுடைய பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் எனவும் கடைகளை ஏற்னவே இருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
2. எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொடக்க தினமான ஜூன் 21 அன்று வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி கட்சியின் துவக்க தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் தலைமையின் தீர்மானத்தின் படி ஜூன் 21 முதல் ஜூலை 21 வரை ஒரு மாதம் முழுவதும் கட்சியினுடைய தொடக்க தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது எனவும், அதனை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடுதல், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.