மாவட்ட செய்திகள்
எடப்பாடியில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில். இதற்க்கான ஏற்ப்பாடுகளை அந்தந்த மாவட்ட நகர்புற தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் தேர்தலில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நேர்மையாக தேர்தலை நடத்தவும் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேட்ப்பாளர்கள் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை அடுத்து சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊர்வலமாக சென்று கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்,
CATEGORIES சேலம்