தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
![தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம். தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-01-at-11.33.25-AM-e1654063531682.jpeg)
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியைக் கைவிட வேண்டும் தேனி மாவட்ட முல்லைப் பெரியாறு விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதிப்படைய செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து தொடங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ (எம்எல்) ரெட் ஸ்டார் எஸ்டிபிஐ கட்சி வனவேங்கைகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை உள்பட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தேனி தாலுகா அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
CATEGORIES தேனி