BREAKING NEWS

விடா முயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற உடுமலை மாணவர்.

விடா முயற்சியால்  ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற உடுமலை மாணவர்.

தேர்வு குறித்த புரிதல் தொடர்முயற்சி கலந்துபடிதல் மற்றும் அனுபவம்பெற்றவர்களிடம் பயிற்சி ஆகியவை வெற்றியை சாத்தியமாக்கியதாக பெருமிதம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்தவர் சந்தோஸ்குமார்.

எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைசெய்து வந்தநிலையில் இவரது ஆசியர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஸ்ரீதர் என்பவரின் அறிவுரையின் பேரில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத தொடங்கினார்.

படிப்பதற்கு போதிய நேரமில்லா சூழலில் வருவாய் தந்துகொண்டிருந்த தனியார் நிறுவன வேலையையும் விட்டுவிட்டு படிக்க தொடங்கினார்.
இருப்பினும் தொடர்தோல்விகளே அவருக்கு கிடைத்தது.

பெற்றோரிரின் ஆதரவு வார்த்தைகளுடன் பின்வாங்காமல் முயன்று தேர்வுகுறித்து தெளிவான புரிதல் குழுவாக படித்தல் தினசரி செய்திகள் மற்றும் அதன் பல்வேறு கோனங்கள் இவற்றுடன் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி ஆகியவற்றோடு மீண்டும் களமிரங்கி வெற்றிகண்டுள்ளார் சந்தோஸ்குமார்.

வெற்றி பெற்றவர்களை விட தோல்வியைகண்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கபடவேண்டும் அவர்களும் மனம் தளராமல் வெற்றி பெருவோம் என்ற நல்ல சிந்தனையுடன் முயலவேண்டும் தேர்வில் எந்த் மாதிரியான கேள்விகளுக்கு முக்கியதுவம் அளிக்கபடும் என சுயமாக புரிந்துவைத்துகொள்ளுதல் வெற்றியைதரும் இனையம் வளர்ந்துவரும் நிலையில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகள் கலையபட்டுள்ளது ஆகவே இனையவாயிலாக கற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும் என்கிறார் சந்தோஸ்குமார்.

ஐ.ஏ எஸ் தேர்வுகான பாடதிட்டம் பெரியது அதை புரிந்து படிக்கவேண்டும்.

அரசு பயிற்சி மையத்தில் பனியிலிருக்கும் அதிகாரிகள் ஆசிரியர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் வழங்கபடுவதாகவும் அது மிகவும் உதவியாக இருந்ததாகவும் கூறுகிறார்.

முயற்சி செய்தால் வெற்றி எல்லோர்க்கும் சாத்தியம் என்று பொத்தாம்பொதுவாக என்னிவிடாமல் புரிந்து படித்தல் குழுவாகவ்படித்தல் தோல்விகள் குறித்து வருந்தாமல் தொடர்முயற்சி ஆகியவைகளும் அரசின் பயிற்சிவகுப்பைகளையும் பயன்படுத்திகொண்டு வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார் சந்தோஸ் குமார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )