நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய சமையல் மாஸ்டர் கைது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முத்துலிங்கம்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகள் சங்குபதி வயது 27. இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக தனது தந்தை பொன்ராஜ் வீட்டில் தனது 2 பெண் குழந்தைகள் குட்டியம்மாள், சுருதிகாஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் வயது 40. (சமையல் மாஸ்டர்) என்பவருக்கும் அடிக்கடி முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துலிங்காபுரம் வீதியில் சங்குபதி நடந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பால்ராஜ் கடுமையாக சங்குபதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சங்குபதி நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சங்குபதி கொடுத்த புகாரின்படி விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு பால்ராஜ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் போலீசார் அடைத்தனர்.